#Breaking : திருச்சி ஜல்லிக்கட்டில் காளை முட்டி பார்வையாளர் ஒருவர் பலி ...!

One person has died after being hit by a bull at Jallikattu in Nawalurkuttapattu village in Trichy.

திருச்சி நாவலூர்குட்டபட்டு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொங்கல் திருவிழாவை யொட்டி திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு எனும் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றிருந்த பார்வையாளர் வினோத் என்பவர் காளை முட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது இதுவரை 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.