#BREAKING: 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

Government of Tamil Nadu orders promotion of 20 IAS officers serving in Tamil Nadu.

தமிழகத்தில் பணியாற்றும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முகவரி பிரிவு அதிகாரி ஷில்பா சதிஷ் பிரபாகர் உள்பட பணியாற்றி வரும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்று மாநில கேடரில் பணியாற்றும் 2006 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, சூப்பர் டைம் ஸ்கேல் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஹனிஸ் சாப்ரா – இயக்குனர், பொருளாளர், விவகாரத்துறை, டெல்லி. அஜய் யாதவ் – பண்பாட்டுத்துறை அமைச்சக இயக்குனர். ஜி. லட்சுமி பிரியா – ஆணையர், தொழில்நுட்ப கல்வி, சென்னை. எஸ் ஜெயந்தி – கூடுதல் ஆணையர், நில நிர்வாகம், சென்னை. டாக்டர் பி சங்கர் – தலைமை நிர்வாக அலுவலர், காதி கிராம தொழில் வாரியம், சென்னை.

கே.விவேகானந்தன் – நிர்வாக இயக்குனர், ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம், சென்னை. ஏ.ஞானசேகரன் – ஆணையர் கால்நடை வளர்ச்சித்துறை, சென்னை. டிஎஸ் ராஜசேகர் – உறுப்பினர் செயலர் மாநில திட்ட ஆணையர், சென்னை ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

unknown node