#BREAKING: ஆக்சிஜன் சிலிண்டர் உதவின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார் சசிகலா – மருத்துவமனை அறிக்கை

The Victoria Government Hospital in Bangalore has released a report stating that Sasikala's health is stable.

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. சசிகலா நான்காவது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார்.

சசிகலா உடலில் சக்கரை அளவு உள்ளிட்டவை இயல்பான அளவிலேயே உள்ளன. உடல்நிலை சீராக இருப்பதால் சசிகலா இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். தொடர்ந்த சசிகலா உடல்நிலை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. மேலும், நேற்று ரத்த அழுத்த மாறுபாடு இருந்த நிலையில், தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

unknown node