#BREAKING: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை

Sasikala, who is being treated for corona, is in stable condition, hospital management said in a statement.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூர் சிறையில் இருந்த சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவை தாமே உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

unknown node