#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் தடுப்பூசி இலக்கான 20 லட்சத்தை தாண்டியது!

In Tamil Nadu today, more than 20 lakh people were vaccinated against the corona vaccine target in a single day.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்கான 20 லட்சத்தை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்கான 20 லட்சத்தை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 40,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இரவு 7 மணி வரை முகாம்கள் நடைபெற உள்ள நிலையில், மாலை 4 மணியளவில் 20 லட்சம் இலக்கு எட்டப்பட்டது. இன்று மட்டும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மாலை 4.23 மணி நேரப்படி 20.11 லட்சம் பேருக்கு, மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பல இடங்களில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டன என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த முன்வந்த மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.