#BREAKING: வெற்றி நடைபோடும் தமிழகம் – அதிமுக பரப்புரை!

Chief Minister Palanisamy will start his election campaign tomorrow under the theme 'Tamil Nadu where victory will go on AIADMK'

அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் நாளை முதல் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை தொடங்குகிறார்.

இன்னும் ஒருசில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில், அதிமுக சார்பில்வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில்நாளை முதல் 31-ஆம் தேதி வரை நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரையை தொடங்கவுள்ளார். அம்மா திட்டத்தை விளக்கியும் அதிமுக அரசின் சாதனைகளையும் “ரிப்போர்ட் கார்டு” வடிவில் மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஏற்கனவே, திமுக சார்பில் தமிழகம் மீட்போம் என்ற பெயரில் மு.க ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.