தயிர் பாக்கெட்டுகளில் தஹி என அச்சிட முடியாது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தயிர் பாக்கெட்டில் (Dahi) தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது அச்சிட FSSAI அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், தயிர் பாக்கெட் மீது ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் மத்திய அரசின் முடிவை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியில் பிரதானமாக தஹி என அச்சிட இயலாது எனவும், மறுத்துள்ளது.
மேலும் , ஆவின் தயிரில் தஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது எனவும், தொடர்ச்சியாக ஆவின் தயிர் என்ற பெயரிலேயே , தமிழ் மொழியில் பிரதானமாகக் கொண்டு இந்த ஆவின் விநியோக பொருட்கள் வழங்கப்படும் எனவும். பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.