தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவிப்பு!

The OPS has filed the budget today. In this, the financial allocation was announced. An information about: - revenue department Rs 6,144 crore Rs. 300 crore Rs. Rs 519.81 crores Rs.25.81 crores pucca Rs 303.36 crores scholarship Rs 333.36 crores high school Rs. Rs 324 crores Rs 3 crores Rs.20 crores Rs.47 crores Rs. Rs 787 crores Rs 200 crores Rs 200 crores munivu toilet fund Rs.156 crores sanity relief fund Rs. Rs 172 crore Rs. Rs 8,916 crore Backward Classes Welfare Rs 1,190 crore purity India Rs 1,074 crore Rs 1 crore for youth youth welfare and sports sector Rs. Rs. 1,789 crore Rs. Rs 333.82 crore for Principal's Medical Insurance Scheme Rs 1,336 crore free bicycle project 71.01 crore students laptop to school students 758 crores compulsory education scheme to be implemented Rs.1747 crores has been allocated for the 200.70 crores nutritional program, said Deputy Chief Minister OPS Budget Speech.

இன்று நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல் :-

வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி

குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி

நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி

பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி

உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி

ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி

வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு

மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை  நினைவிடமாக்க ரூ.20 கோடி

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு ரூ.347.59 கோடி

பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி

காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கீடு

மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ.250 கோடி

மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி

சுகாதாரத் துறைக்கு ரூ.11,638.44 கோடி

உள்ளாட்சித் தேர்தலுக்கு ரூ.172 கோடி

வேளாண்மைத் துறைக்கு ரூ. 8,916 கோடி

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ. 972.86 கோடி

தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074 கோடி

இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி

உள்ளாட்சித் துறைக்கு ரூ.17,869 கோடி

குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853 கோடி

முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,789 கோடி

பழங்குடியினர் நலனுக்கு ரூ. 333.82 கோடி

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ. 1,336 கோடி

இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ. 71.01 கோடி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க ரூ. 758 கோடி

கட்டாயக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி

சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747 கோடி

என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.