புரெவி உருவாகியது: இன்று தமிழகத்தில் அதித கனமழை பெய்யும்.!

The Meteorological Department said that the low pressure area in the Bay of Bengal turned into a hurricane yesterday.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புரெவி புயலாக மாறியது  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்து இன்று அதிகாலை புயலாக வலுப்பெறும் என்றும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலையில் அங்கிருந்து மன்னார் வளைகுடா வழியாக 4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையில் தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனால், தமிழகத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதித கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக தென் தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 20 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.