சென்னை மக்களே.. வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் உடனே இந்த எண்களுக்கு போன் செய்யுங்கள்!

Nivar Strom: If snakes enter houses in Chennai, the forest department can be contacted on 044-22200335, 9566184292.

சென்னையில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால், 044-22200335, 9566184292 ஆகிய எண்கள் மூலம் வனத்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல், தற்போது அதிதீவிர புயலாக உருமாறி, மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் வீடுகளின் மூனை முடுக்குகளில் பாம்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அவ்வாறு பாம்புகள் வந்தால் மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், 30-ல் 4 வகையான பாம்புகள் மட்டுமே ஆபத்தானவை என வனத்துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு சென்னையில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால், 044-22200335, 9566184292 ஆகிய எண்கள் மூலம் வனத்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.