கூட்டணி இல்லாமல் வெல்ல முடியாது...மாணிக்கம் தாகூர் பதிவு!

அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே என மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Manickam Tagore .B

சென்னை :காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு அரசியல் குறித்து X தளத்தில் பரபரப்பு கருத்து பதிவிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது” என்று தெரிவித்த அவர், இப்போது அதிகாரம் மட்டுமல்ல, அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தினார்.

IPDS தகவலை மேற்கோள் காட்டிய மாணிக்கம் தாகூர், “மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார். கூட்டணி அரசியலின் அவசியத்தை வலியுறுத்திய அவர், தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடுவது வெற்றிக்கு உகந்தது அல்ல என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே Time for share of power not only Share of seats” எனவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.