கார் விபத்து! முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழப்பு

this news given information about Car accident! Former AIADMK MLA Sundarwal and three others, including his wife, were killed

கார் விபத்தில் திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுந்தரவேல் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.தற்போது திருப்பத்தூர் அமமுக நகர செயலாளராக இருந்து வந்தார்.இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி.சுந்தரவேல் அவரது மனைவியுடன்  மருத்துவர் ஒருவரை பார்க்க சென்னை சென்று கொண்டிருந்தார்.காரை வீரமணி  என்பவர் ஓட்டினார்.    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.கார் வந்த வேகத்தில்  லாரியின் அடியில் சிக்கியது.சுந்தரவேல், அவர் மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்த செய்தி அறிந்தவுடன்  காவல்த்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.பின்னர் லாரியின் அடியில் சிக்கியிருக்கும் காரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.பல மணி நேரத்திற்கு பின்னர்  காரில் இருந்து அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.