#ElectionBreaking: திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

A case has been registered against DMK candidate KN Nehru in Trichy West constituency at the Musiri police station.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தது. இதனைதொடர்ந்து 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்-ல் ஆபாசமாகவும், மிரட்டும் வகையில் பேசியதாக திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது தேர்தல் அதிகாரிகள் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.