சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

this news gives information about Case for postponing the election for the Chitta festival: The High Court of Dismissing-

தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது.

தமிழக அரசின் முடிவை கேட்ட பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த மாதம் 11-ம் தேதியில் இருந்து மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 18 -ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள அதே நாளில் தான் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், தேர்தலை ஒத்திவைக்க முடியாது,எனவும் தமிழக அரசின் முடிவை கேட்ட பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்  சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது.