சென்னை :வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, தற்போது மதுரையில் தரையிரங்க வேண்டிய 2 விமானம் வானில் வெகு நேரமாக வட்டமடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பெங்களுருவில் மற்றும் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த 2 இண்டிகோ விமானங்கள் தரையிறங் வேண்டிய நிலையில் கனமழை அங்கு பெய்து வருவதால் பாதுக்காப்பு காரணமாக வானில் வெகு நேரமாக வட்டமடித்து வருகிறது என தகவல் தெரியவந்துள்ளது.
மழை நின்ற பிறகு விமானம் தரையிறங்குவதாகவும், அல்லது முடியாவிட்டால் அருகில் உள்ள தூத்துக்குடி மற்றும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதாக திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், வட்டமடிக்கும் இரு விமானங்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வானில் 3 மணி நேரம் வட்டமடித்து அதன்பின் பாதுக்காப்பாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
