கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை!

மதுரை மாவட்டத்தில் ரூ.206 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஒன்று பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான்

Kalaignar Memorial Library

மதுரை மாவட்டத்தில் ரூ.206 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஒன்று பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் நூலகத்தில் புகைப்படம், வீடியோ எடுக்கவும் அனுமதியில்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நூலகத்தில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி கிடையாது எனவும், குழந்தைகள் பிரிவில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.