தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

The Chennai Meteorological Department has forecast heavy rains for 5 days in Tamil Nadu.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆகிய  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் வருகின்ற ஜூன் 2ஆம்  தேதி கன மழை பெய்யலாம், எனவும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம்,  கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.