தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

The Chennai Meteorological Department has forecast heavy rains in Theni, Dindigul, Tenkasi, Madurai, Nilgiris and Kumari districts in Tamil Nadu in the next 24 hours.

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, நீலகிரி, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குரிச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.