தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக  தர்மபுரி, கிருஷ்ணகிரி புதுக்கோட்டை,பெரம்பலூர், அரியலூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.