தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, தருமபுரி, தேனி, விழுப்புரம், ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ளது.