தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

Chennai Meteorological Department has forecast heavy rains in 13 districts of Tamil Nadu.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தேனி, மதுரை, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (ஜூலை 2) தமிழகத்தில், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தருமபுரி, சேலம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தேனி, விழுப்புரம், ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!