14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

The Chennai Meteorological Department has forecast heavy rains in 14 districts in Tamil Nadu due to atmospheric circulation.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நெல்லை, தேனி, நீலகிரி, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் வரை தமிழகம் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர், புதுச்சேரியில் தலா 19 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் புதுச்சேரியில் கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.