தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

The Chennai Meteorological Department has forecast heavy rains in 3 districts of Tamil Nadu.

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.