தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தின் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்குவாய்ப்பு எனவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.