அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

The Chennai Meteorological Department has forecast heavy rains in 5 districts of Tamil Nadu in the next 24 hours.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.