#Weather: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

தமிழ்நாடு:

இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.