தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

The Chennai Meteorological Department has forecast heavy rains with thunder and lightning in 8 districts in Tamil Nadu.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் மற்றும் குமரிக் கடல், இலங்கையை யொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில்வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியகனமழைபெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.