தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

The Chennai Meteorological Department has forecast heavy rains in 4 districts in Tamil Nadu in the next 24 hours.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும், நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, நெல்லை, தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்தமாக நீடிப்பதாகவும், இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 24ஆம் தேதி புயலாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த மூன்று நாட்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.