16 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

The Chennai Meteorological Department has forecast light showers in 16 districts of Tamil Nadu.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, சேலம், தர்மபுரி,  திருப்பூர், திருப்பத்தூர், மதுரை மற்றும் தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, நெல்லை, தென்காசி ஆகிய 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்  வருகின்ற 27ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்றும், கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.