தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

Chennai Meteorological Department has forecast light showers in the western hills and southern Tamil Nadu districts due to global warming.

வெப்பச்சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில், ஈரோடு, சேலம் தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் ல் மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.