அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு...!

The Chennai Meteorological Department has forecast light showers in Kanyakumari and adjoining districts of the Western Ghats in Tamil Nadu due to the cyclone.

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

நாளை முதல் அடுத்த மாதம் 1 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என்றும், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதைபோல் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.