வட தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

The Chennai Meteorological Department has forecast thundershowers in parts of the south, delta and districts of Karaikal.

தென்தமிழகம், டெல்டா, மாவட்டங்கள் காரைக்கால், பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், டெல்டா, மாவட்டங்கள் காரைக்கால், பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில்12 செ.மீ மழையும், திருத்தணி, சிவகிரியில் தலா 7 செ,.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது