தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

Districts along the Western Ghats today and tomorrow are likely to receive moderate rainfall in southern Tamil Nadu.

இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமானமழைக்குவாய்ப்பு எனவும், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது எனவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.