2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

The Chennai Meteoro logical Department has forecast moderate rains for two days in southern today Tamil Nadu

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.