3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்..!

The Chennai Meteorological Department has forecast moderate rains with thunder and lightning across Tamil Nadu on the 20th and 21st.

தமிழகம் முழுவதும் வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும், வருகின்ற 19ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தகவல் தெரிவித்துள்ளது.