தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

The Chennai Meteorological Department has forecast light showers in the districts along the Western Ghats from today till May 2 due to the cyclone.

வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வருகின்ற மே 2- ஆம் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் கர்நாடகாவில் இருந்து தென்கேரளா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வருகின்ற மே 2- ஆம் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.