தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

The Chennai Meteorological Department has forecast light to moderate rains for the next 5 days in Tamil Nadu due to global warming.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வருகின்ற 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை சேலம், தேனி, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்கள் புதுசேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.