தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

The Chennai Meteorological Department has forecast 5 days of rain in Tamil Nadu

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் தென் மாவட்டங்களில் டெல்டா பகுதிகளில் பெரும்பாலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.