தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

Chance of thundershowers in the southern districts of Tamil Nadu including Kanyakumari, Nellai and Thoothukudi from today till the 12th.

இன்று முதல் வருகின்ற 12-ஆம் தேதி வரை தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று முதல் வருகின்ற 12-ஆம் தேதி வரை தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  வடதமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வும் மையம் கூறியுள்ளது.