தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு...!!

The Chennai Meteorological Department has forecast showers in Tamil Nadu for the next three days.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா, டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஈரோடு, தர்மபுரி, சேலம் , கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இந்த வெயில்  மே 29-ம் தேதி வரை நீடிக்கவுள்ளது . கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த மாதத்தில் அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.