13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

Chennai Meteorological Department has forecast light to moderate rains in 13 districts along the Western Ghats.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 13 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல்

தென்தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 13 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும், எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.