தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

The Chennai Meteorological Department has forecast showers in 17 districts of Tamil Nadu due to the cyclone.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மராட்டியம் முதல் தென் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டலத்தில் ஒரு கி.மீ உயரத்துக்கு மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றில் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.