தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை 5 -ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் முன்னதாக தகவல்கள் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டணம், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.