தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

The Chennai Meteorological Department has forecast light to moderate rains in some parts of Tamil Nadu from the 19th to the 22nd of this month.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு மேற்குத்திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு. அதேபோல் இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால், பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.