தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

The Chennai Meteorological Department has forecast showers in the coastal districts of Tamil Nadu.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் ஜூன் 10 முதல் 12 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.