4 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

The Chennai Meteorological Department has forecast showers in the southern districts of Tamil Nadu from today till the 10th.

தென் தமிழக மாவட்டங்களில் இன்று முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரள கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 7,8,9,10 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களின் ஒரு சில பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுவையில் வறண்ட வானிலேயே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.