தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்..!

According to the Chennai Meteorological Department, there is a possibility of rain for 4 days due to the circulation in the atmosphere

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.

குமரிக்கடல் முதல் வடதமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 9 ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும், ஏனைய மாவட்டங்களிள் வறண்ட நிலை நிலவும் எனவும், 10 மற்றும் 11  ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசான மழைபெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.