தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

The Chennai Meteorological Department has forecast showers in Tamil Nadu for the next five days.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தர்மபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி, தென்காசி,  கன்னியாகுமரி, உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  வெப்பநிலை 4 முதல் 5  டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.