தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை 5 -ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேரையூர் (மதுரை), காரியகோவில் அணை (சேலம்) தலா 3செ.மீ , சங்கரன்கோவில் (தென்காசி) பாப்பரப்பட்டி KVK (தர்மபுரி) தலா 2செ.மீ , மரண்டப்பள்ளி (கிருஷ்ணகிரி), ஷூலகிரி (கிருஷ்ணகிரி) சூலூர் (கோவை), சின்னக்கல்லார் (கோவை), ஏற்காடு (சேலம்), பொள்ளாச்சி (கோவை), கீரனுர் (புதுக்கோட்டை) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.