மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

The Chennai Meteorological Department has forecast showers in the hilly districts of the Western Ghats due to the atmospheric circulation.

வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மராட்டியம் முதல் தென் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டலத்தில் ஒரு கி.மீ உயரத்துக்கு மேலடுக்கு சுழற்சியால், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமானமழைக்குவாய்ப்பு என்று சென்னைவானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வருகின்ற 27ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்றும், கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.